වහළ මත සූර්ය බලාගාර ජාතික විදුලිබල පද්ධතියෙන් ඉවත් කිරීමේ දුෂ්ඨ සැලසුම ජාතික අපරාධයක්
මහාචාර්ය වන ඔලිවර් ඉලේපෙරුම සහ මහාචාර්ය අයි.එම්. ධර්මදාස 2026 අප්රේල් 12 වන දින ද අයිලන්ඩ් පුවත්පතේ ප්රධාන ප්රවෘත්තිය වූයේ අඩු ඉල්ලුමක් ඇති කාලවලදී වහළ මත සූර්ය බලශක්තිය වසා දැමීමට ලංවිම කළ ඉල්ලීමයි. ඔවුන්ගේ තර්කය වන්නේ වහළ මත සූර්ය පැනල දිවා කාලයේදී මෙගාවොට් 300ක පමණ බලයක් නිපදවන බවත් එවැනි බරක් සමඟ ජාලකය සමතුලිත කිරීමට කිසිදු ක්රියා පටිපාටියක් නොමැති බවත්ය. අපි මෙන්ම …
Continue Reading
Shutting roof top solar panels-An ominous crime
Professors Oliver Ileperuma and I M Dharmadasa The Island newspaper’s lead news item on the 12th of April 2026 was on the CEB request to shut down rooftop solar power during the low demand periods. Their argument is that rooftop solar panels produce about 300 MW power during the day and there is no procedure to balance the grid with …
Continue Reading
பொருளாதாரஇறையாண்மையைவென்றெடுக்கும்போராட்டத்தினைதீவிரப்படுத்தவேண்டும்;கம்யூனிஸ்ட்கட்சி
-
Editor
-
May 1, 2026
-
அரசியல்
-
அரசியல்
-
0 Comments
ஆசியப் பொருளாதாரம், 500 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தின் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, பொருளாதார இறையாண்மையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும். அதற்காக பிரிக்ஸ் அமைப்புடன் ஒத்துழைப்புப் பாதையில் இணையுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வற்புறுத்துகிறோமென சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மே தினத்தினை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே அக்கட்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், இந்தமுறை மே தினம், முழு உலகமும் ஆழமான …
Continue Reading
தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவின் மே தினச் செய்தி
நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்த குடும்ப அரசியல் மற்றும் ஊழல் நிறைந்த நிர்வாக முறைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, உழைக்கும் மக்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் புதியதொரு சமூக மாற்றத்தை தற்போதைய அரசாங்கம் உறுதிப்படுத்தும் என தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையின் ஊடாக அவர் மேலும் தெரிவிக்கையில், உலகெங்கிலும் வாழும் உழைக்கும் மக்களால் பெருமையுடன் கொண்டாடப்படும் 137 ஆவது சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை வாழ் தொழிலாளர் சமூகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இம்முறை மே தினமானது மக்களாட்சிக்கு மக்கள் சக்தி எனும் தொனிப்பொருளின் கீழ் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது. எமது நாட்டில் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த குடும்ப அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும், தூரநோக்கற்ற சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பையும் மக்கள் ஒன்றிணைந்து தோற்கடித்துள்ளனர். மனிதாபிமானத்தை முன்னிறுத்திய ஒரு மக்கள் ஆட்சியை நிலைநாட்டி, நாட்டுக்கும் மக்களுக்கும் வெற்றியைத் தேடித்தரும் சமூகப் மாற்றத்திற்கான பின்னணியில் இம்முறை மே தினத்தை கொண்டாடுவது மிகவும் சிறப்பம்சமாகும். அரசு, தனியார் மற்றும் தோட்டத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், முறையான ஊதிய உயர்வை உறுதிப்படுத்துவதே எமது இலக்காகும். அத்துடன், உற்பத்தித் திறன் மிக்க, ஜனநாயக ரீதியான மற்றும் அமைதியான தொழில் உறவுகளைக் கட்டியெழுப்புவதுடன், உழைப்பின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்போதுள்ள தொழில் சட்டங்களைத் திருத்தியமைக்கவும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த இந்நாட்டை, பாரிய சவால்களுக்கு மத்தியில் மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மை நோக்கி நகர்த்தியமை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அடைந்த பிரதான வெற்றியாகும். எத்தகைய சவால்களையும் தாங்கிக்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும், அதன் பயன்கள் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதும் எமது பிரதான பொறுப்பாகும். எதிர்காலச் சவால்களை இனங்கண்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்ததொரு சமூகத்தை உருவாக்கும் பெரும் எதிர்பார்ப்புடன் அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் தவிர்க்க முடியாத கடமையாகும். நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக மக்கள் எதிர்பார்த்த பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, முழு உழைக்கும் மக்களுக்கும் இலங்கை வாழ் பிரஜைகளுக்கும் வெற்றியைத் தேடித்தர நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்றார்.
Continue Reading
ஜனாதிபதி அநுரகுமாரவின் மே தினச் செய்தி
சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உங்கள் மனசாட்சிக்கு இணங்க எம்முடன் இணையுமாறு உழைக்கும் மக்களுக்குச் சகோதரத்துவத்துடன் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மே தினத்தினை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘தித்வா’ சூறாவளி, மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் …
Continue Reading
பிரதமர் ஹரிணியின் மே தினச் செய்தி
அனைத்து விதமான உழைப்பையும் மதிக்கும், உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, சமத்துவமிக்க ஒரு நாட்டை உருவாக்குவதற்காக ஒன்றுபட வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும். 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த சக்தியாக எழுந்து நின்றனர். ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமான தொழிற்சங்க இயக்கத்தின் வழிவந்த தொழிலாளர் …
Continue Reading
எதிர்க்கட்சித் தலைவரின் மே தினச் செய்தி
தொழிலாளர் உரிமைகளை நசுக்கி, அநீதியான வரிக் கொள்கைகள் மூலம் மக்களின் நுகர்வுத் திறனை அழித்து வரும் தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது, 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூர்ந்து, இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது நன்மதிப்பை தெரிவித்துக் கொள்கிறேன். அன்று வியர்வை, கண்ணீர் …
Continue Reading
ஆளும் எதிர்க்கட்சிகள் மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் அரசியல் கட்சிகள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புக்கள் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தவுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் இம்முறை மே தின கூட்டம் மற்றும் பேரணிகளை வரையறுத்துள்ளமை விசேட அம்சமாகும். கொழும்பு மற்றும் புற நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் விசேட போக்குவரத்து வசதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மே தினத்தை முன்னிட்டு இன்றும், எதிர்வரும் 3-0 மற்றும் 31ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் …
Continue Reading
வட,கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு
-
Editor
-
May 1, 2026
-
அரசியல்
-
அரசியல்
-
0 Comments
இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்பன உள்ளடங்கலாக தமிழ்த்தேசியக் கட்சிகளின் மேதினக் கூட்டங்கள் இன்றைய தினம் வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறவுள்ளன. அதற்கமைய இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் ‘தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்’ எனும் மகுடத்தில் வடக்கில் மாங்குளம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் பி.ப 3.30 மணிக்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் பட்டிப்பளை வைரவர் விளையாட்டுக்கழக மைதானத்தில் பி.ப 2.00 மணிக்கும் மேதினக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவையின் …
Continue Reading
நாட்டின் கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தமை மிகப்பெரும் மரியாதை; எரான் விக்கிரமரத்ன
நாட்டின் கிரிக்கெட் முன்னேற்றத்தை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய மரியாதையாகும். ஜனாதிபதி அநுர மற்றும் அமைச்சரின் அழைப்பை அடுத்து விரிவான கலந்துரையாடல்களின் பின்னர், இந்தப் பொறுப்பை ஏற்க நான் சம்மதித்தேன். இப்பதவியை நான் மிகுந்த பொறுப்புடன் ஏற்றுக்கொள்கின்றேன் என்று சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிறைவேற்றுக் குழுவின் தலைவரான எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம் பதவியை ஏற்றுக்கொண்டதையடுத்து விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் …
Continue Reading